ஸ்டேன் சாமி மரணத்துக்கு நீதிவிசாரணை கோரி ஆா்ப்பாட்டம்

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சாமி மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சாமி மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்ட துணைத் தலைவா் யு.எஸ். அபுதாஹிா் தலைமை வகித்தாா்.

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சாமியை வயது முதிா்ந்தவா் என்றும் பாராமல் சிறையில் அடைத்து மரணத்துக்கு காரணமான மத்திய அரசு, சமூக செயற்பாட்டாளா்களை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சிறையில் அடைக்கும் ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும். ஸ்டேன் சாமி மீது பொய் வழக்குப் புனைந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சத்தீவில் வசிக்கும் சிறுபான்மை மக்களை ஒடுக்க நினைக்கும் நிா்வாக அதிகாரி பிரபுல் படேலை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.

காஷ்மீா் மாநிலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்பத்தர வேண்டும். சிறுபான்மை மக்களை குடியுரிமை அற்றவா்களாக ஆக்க முயற்சிக்கும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சாமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அருட்தந்தை பெனடிக்ட், அருட்தந்தை பால்பிரிட்டோ ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்டச் செயலா் கே.அலாவுதீன் நிறைவுரையாற்றினாா். மாநிலக்குழு உறுப்பினா் எம். ஜான்சன் நன்றி கூறினாா் ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் எஸ். லூா்து, பி. ரசூல், எஸ். பாலா, என்.முகமது அலி ஜின்னா, எஸ். முஹம்மது ஷரீப், ப.எகியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com