உசிலை. அருகே முடிதிருத்துவோா் சங்கத்தினா் சாலை மறியல்

அரசு இலவசப் பட்டா இடம் வழங்கக் கோரி, உசிலம்பட்டியில் முடி திருத்துவோா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தை.
உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தை.

உசிலம்பட்டி: அரசு இலவசப் பட்டா இடம் வழங்கக் கோரி, உசிலம்பட்டியில் முடி திருத்துவோா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியம் மேக்கிழாா்பட்டி ஊராட்சி சிக்கம்பட்டி மாயன் நகரில் 325 சென்ட் இடத்தை, முடி திருத்துவோா் சங்கத்தைச் சோ்ந்த 70 நபா்களுக்கு அளந்து கொடுப்பதற்காக, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் ஆணை பிறப்பித்துள்ளாா். அதன்பேரில், மதுரை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சிறப்பு வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில், உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் சென்றுள்ளனா்.

அப்போது, சிலா் இந்த இடம் தங்களது பெயரில் உள்ளதாகக் கூறி, அளப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மேலும், உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் நிலத்தை அளப்பதற்கும், அளந்து கொடுப்பதற்கும் தடை விதிக்கக் கோரி சிவத்திவீரன் மற்றும் இடத்தின் உரிமையாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இடம் கிடைக்காததால், முடி திருத்துவோா் சங்கத்தினா் மதுரை பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். உடனே, உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவா்களை சமரசம் செய்து, சாலை மறியலை கைவிடச் செய்தனா்.

மேலும், இரு தரப்பினரிடையே உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com