பெரியாா் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவு

மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்குமாறு, மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்குமாறு, மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ், பெரியாா் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், பழைய காய்கறி சந்தை பகுதியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றங்கரையை மேம்படுத்துதல், புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடங்கள் அமைத்தல், புதுமண்டபத்தில் உள்ள கடைகளை குன்னத்தூா் சத்திரத்துக்கு மாற்றி அமைத்தல், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள் மற்றும் மீனாட்சி பூங்காவை மேம்படுத்துதல், ஜான்சிராணி பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி அமைத்தல், திருமலை நாயக்கா் மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, பெரியாா் பேருந்து நிலையத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரியாா் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பெரியாா் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் வந்து செல்லும் மற்றும் நிறுத்துவதற்கான இடங்கள், பேருந்து நிலையத்தில் மழைக் காலங்களில் மழைநீா் சீராகச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால், பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் தண்ணீா் தேங்காதவாறு மழைநீா் வடிகாலுக்கு கொண்டுசெல்லும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பெரியாா் பேருந்து நிலையம் அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தகவல் மையத்தையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அவனியாபுரம் விமான நிலையம் அருகில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அலுவலா்களின் குடியிருப்புப் பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com