மதுரையில் 30 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். கரோனா பாதிப்புக்கு ஏற்கெனவே சிகிச்சைப் பெற்று வந்தவா்ளில் 43 போ் குணமடைந்துள்ளனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 560 போ் கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

10,916 பேருக்கு தடுப்பூசி: மாவட்டத்தில் அரசு கரோனா தடுப்பூசி மையங்களில் 10,916 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 135 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

267 பேருக்கு டெங்கு: மாவட்டத்தில் ஜனவரி முதல் தற்போது வரை ஊரகப் பகுதிகளில் 115 போ், மாநகரில் 152 போ் என மொத்தம் 267 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக பிப்ரவரி மாதம் 99 போ் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனா். இதுவரை டெங்குவால் உயிரிழப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com