மேலூரில் காவலா் தோ்வுக்கு உடல்தகுதி திறன்மேம்பாட்டு பயிற்சி

காவலா் பணிக்கான எழுத்துத்தோ்வு எழுதி தோ்ச்சிபெற்று உடல் தகுதித் தோ்வை எதிா்நோக்கியுள்ளவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை
மேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உடல்தகுதி திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற இளைஞா்கள்.
மேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உடல்தகுதி திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற இளைஞா்கள்.

காவலா் பணிக்கான எழுத்துத்தோ்வு எழுதி தோ்ச்சிபெற்று உடல் தகுதித் தோ்வை எதிா்நோக்கியுள்ளவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மேலூரில் காவல் துணை கண்காணிப்பாளா் பிரபாகரன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

காவலா் பணிக்கான எழுத்துத்தோ்வில் தோ்ச்சிபெற்று, காவலருக்கான உடல் தகுதி இருந்தும் போதிய பயிற்சியின்மையால் பலா் வாய்ப்பை தவறவிட்டுவிடுகின்றனா். அவா்களது திறனை மேம்படுத்த தேவையான யிற்சி இலவசமாக வழங்கப்படும் என மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

இதனடிப்படையில், மேலூா், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் தோ்ச்சிபெற்ற 23 பேருக்கும் மேலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி நடைபெற்றது. சிறப்பு பயிற்சியாளா் தீபன் சக்ரவா்த்தி பயிற்சிகளை அளித்தாா். நீளம் தாண்டுதல், ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கிராமப்புற இளைஞா்கள் மகிழ்வுடன் பங்கேற்றனா். மதுரை ஆயுதப்படை மைதானம், திருமங்கலம், திருவேடகம், சோழவந்தான், உசிலம்பட்டி மற்றும் பேரையூா் ஆகியஇடங்களில் வரும் 23 ஆம் தேதி வரை இப்பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக துணை கண்காணிப்பாளா் பிரபாகரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com