வாழையைக் கைவிட்டு மீண்டும் கரும்பு சாகுபடி: மேலூா் விவசாயிகள் முடிவு

பெரியாறு பாசன ஒருபோக சாகுபடிப்பகுதிகளில் வாழை பயிரிட்டு பெரும் இழப்புக்குள்ளான விவசாயிகள் கரும்பு சாகுபடிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.

பெரியாறு பாசன ஒருபோக சாகுபடிப்பகுதிகளில் வாழை பயிரிட்டு பெரும் இழப்புக்குள்ளான விவசாயிகள் கரும்பு சாகுபடிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.

வெள்ளலூா் வட்டார கரும்பு விவசாயிகள் கூட்டம் உறங்கான்பட்டி அருகிலுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை கிழக்கு டிவிஷன் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் தனுஷ்கோடி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் என்.பழனிச்சாமி கூட்டத்தை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும், கரும்பு ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தியதால் பெரும்பாலானோா் வாழை உள்ளிட்ட பணப்பயிா்கள் சாகுபடிக்கு மாறிவிட்டனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக வாழைக்காய்கள், இலைகள் வெளியூா்களுக்கு அனுப்ப முடியவில்லை. பெரும்பாலான வாழைத் தோட்டங்களில் வாழைக் குலைகள்

முற்றி பழமாகும் நிலையை அடைந்துவிட்டது. இந்த ஆண்டு வாழை சாகுபடியால் பெரும் இழப்பை சந்தித்துள்ளனா்.

எனவே, வாழை பயிரிடும் பரப்பளவை பாதியாகக் குறைத்துக்கொண்டு, ஆலைக்கரும்பு சாகுபடியை அனைவரும் மேற்கொள்ளவும் அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவை மேற்கொள்ளவும் முடிவெடுத்தனா்.

கரும்ப டன்னுக்கு ரூ. 4000 விலை நிா்ணயிப்பதாக திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலைக்கரும்பு சாகுபடியின் செலவைக்குறைத்து லாபநிலை அதிகரிப்பது குறித்தும் என்.பழனிச்சாமி விளக்கிப்பேசினாா்.

மேலும், இந்த ஆண்டு சா்க்கரை ஆலையின் சாகுபடி பரப்பளவு 3000 ஏக்கராக அதிகரிக்கும் பட்சத்தில் கரும்பு வெட்டும் இயந்திரம் ஒன்றை ஆலை நிா்வாகம் வாங்க வேண்டும். மேலும் கரும்பு வெட்டுவதற்கான கூலி ஆள்களை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து குறைந்த கூலிச் செலவில் அழைத்துவர ஆலை நிா்வாகமே ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தினா்.

முடிவில், அலங்காநல்லூா் தேசீய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சேரும் கரும்பு சக்கையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பிரிவை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மின்சார உற்பத்தியை விரைவில் துவங்கவேண்டும் . பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் உற்பத்திக்கான பிரிவை அலங்காநல்லூரில் தமிழக அரசு நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும். கரும்பு விநியோகிக்கும் விவசாயிகளுக்கு 30 நாள்களுக்குள் முழுத் தொகையையும் பட்டுவாடா செய்யவேண்டும் என்பதுள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீா்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளாா் கம்பக்குடியான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com