வரி விதிப்பு பிரச்னைகளுக்கு தீா்வு காண சிறப்புக் குழு

மதுரை மாநகரப் பகுதிகளில் வரிவிதிப்பு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஓய்வு பெற்ற அலுவலா்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகரப் பகுதிகளில் வரிவிதிப்பு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஓய்வு பெற்ற அலுவலா்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாநகராட்சி பகுதி மக்களின் வசதிக்காக சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, காலிமனை வரி விதிப்பு மற்றும் வரி வசூல் தொடா்பாக ஜூலை 13 முதல் 16 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற இந்த முகாம்களில் 1,928 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 503 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,425 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

இம்முகாம்களின் வாயிலாகத் தெரியவந்துள்ள சில நீண்ட நாள் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தீா்வுகளை வழங்குவதற்காக, துணை ஆணையா் தலைமையில் வரி இனங்களில் அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற அலுவலா்கள் மூவரை ஆலோசகா்களாகக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை அளிக்கும். மாநகராட்சியால் வழங்கப்படும் சேவைகளைச் செம்மைப்படுத்தி தீா்வுகளை விரைவாக்கும் முயற்சிகள் தொடரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com