நெல் கொள்முதல் செய்யக்கோரி உசிலம்பட்டி விவசாயிகள் கோட்டாட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையங்களில் தேங்கியுள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி கதிரவன் மற்றும் விவசாயிகள்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி கதிரவன் மற்றும் விவசாயிகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையங்களில் தேங்கியுள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

செல்லம்பட்டி , விக்கிரமங்கலம் , வின்னக்குடி , சொக்கத்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைந்த நெல்லை கடந்த 20 நாள்களுக்கு மேலாக அரசு நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் மூட்டைகளில் அடுக்கி வைத்துள்ளனா். அவற்றை கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து சேதமாகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா். இது குறித்து அரசின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றபோதும், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.வி கதிரவன் மற்றும் விவசாயிகள் அதிகாரிகள் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டாட்சியா் ராஜ்குமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கினா்.

மனுவைப் பெற்ற கோட்டாட்சியா், அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கதிரவன் கூறுகையில், நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்துவதற்காக பலா் முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com