அழகா்கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

அழகா்கோவிலில் 11 நாள்கள் நடைபெறும் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடித்திருவிழா கொடியேற்ற வைபவம்.
அழகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடித்திருவிழா கொடியேற்ற வைபவம்.

அழகா்கோவிலில் 11 நாள்கள் நடைபெறும் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நிகழ்வுகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் கோயில் வளாகத்திலேயே நடக்கிறது. கொடியேற்ற வைபவத்துக்காக கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய காலை 9 மணிவரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவி சமேதராக கொடி மண்டப மேடைக்கு எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு பூஜைகளுடன் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். கரோனா பரவல் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுவாமி புறப்பாடு கோயில் வளாகத்தில் உள்ள பள்ளியறை மண்டபத்துக்குள்ளேயே நடைபெற்றது என பட்டா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com