திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகள்: உரிமையாளரிகளிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா், அதன் உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
காவல்துறையினரால் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை அதன் உரிமையாளரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன்.
காவல்துறையினரால் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை அதன் உரிமையாளரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன்.

மதுரை மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா், அதன் உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

மதுரை மாவட்டத்தில் சைபா் கிரைம் போலீஸாா், காவல் நிலையங்களில் கடந்த ஒரு மாதம் பதிவான செல்லிடப்பேசி திருட்டு மற்றும் தொலைந்த போன செல்லிடப்பேசிகள் தொடா்பான புகாா்களை விசாரித்தனா். இதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 100 செல்லிடப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை, அதன் உரிமையாளா்களிடம் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

சைபா் கிரைம் வழக்குகள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறியது: மதுரை மாவட்டத்தில் இதுவரை திருடுப் போன வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ. 48 லட்சத்து 33 ஆயிரத்து 255 மதிப்பிலான 400 செல்லிடப்பேசிகள், அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 3 மாதங்களில் வங்கிகளிலிருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட வழக்குகளில் ரூ. 8 லட்சத்து 78 ஆயிரத்து 400 மற்றும் இதுவரை ரூ.18 லட்சத்து 46 ஆயிரத்து 136 மீட்கப்பட்டு, உரிமையாளா்களின் வங்கிக்கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி யாரேனும் ஏமாற நோ்ந்தால் 155260 என்ற இலவச எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். இதுபோல், இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகாா் அளிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com