பீபீ குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிா்த்துப் பொதுமக்கள் போராட்டம்

மதுரை பீ.பீ. குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை பீ.பீ. குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, பீ.பீ.குளம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. பீ.பீ.குளம் முல்லைநகா், மீனாட்சிபுரம், நேதாஜி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என 581 ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, அவை அகற்றப்பட்டு வருகின்றன.

வருவாய், மாநகராட்சி பொதுப்பணி ஆகிய துறைகளைச் சோ்ந்தோா் குழுவாக இப்பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதால் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

முதல்கட்டமாக, சாலையோரம் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் என வணிக உபயோகத்தில் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த நாள்களில் வீடுகள் அகற்றப்பட உள்ளன. இந்த நடவடிக்கையைக் கைவிடக் கோரி அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com