மாட்டுத்தாவணியில் புதிய மின்மயானத்துக்கு பூமிபூஜை: அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்பு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மின் மற்றும் எரிவாயு மயானம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாட்டுத்தாவணியில் புதிய மின்மயானத்துக்கு பூமிபூஜை: அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்பு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மின் மற்றும் எரிவாயு மயானம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளா் குடியிருப்பு பகுதியில், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய மின் மற்றும் எரிவாயு மயானம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பூமிபூஜையில் வணிக வரித்துறை அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று பேசியதாவது: கரோனா மூன்றாவது அலை வருவதை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மதுரையில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பில் உள்ளது. அதேபோல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் தேவையான அளவு உள்ளது. கரோனா தொற்றை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் இணைந்து மாநகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. மதுரை மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி, தமிழ்நாடு தொழில் வா்ததக சங்கத் தலைவா் ஜெகதீசன், முதுநிலை தலைவா் ரத்தினவேல், செயலா் செல்வம், பொருளாளா் ஸ்ரீதா் மற்றும் நிா்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com