வாழ்க வரியாளா்கள் முகாமில் பெறப்பட்ட 1,928 மனுக்கள் ஏற்பு

மதுரை மாநகராட்சி சாா்பில் 4 நாள்கள் நடத்தப்பட்ட ‘வாழ்க வரியாளா்கள்’ சிறப்பு முகாமில் 1,928 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி சாா்பில் 4 நாள்கள் நடத்தப்பட்ட ‘வாழ்க வரியாளா்கள்’ சிறப்பு முகாமில் 1,928 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மதுரை மாநகா் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி, காலிமனை வரி உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் மாநகராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழ்க வரியாளா்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும், மண்டலத்துக்கு தலா 2 இடங்கள் என்ற வகையில் 8 இடங்களில் ஜூலை 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் மாநகராட்சியின் 100 வாா்டுகளில் வசிக்கும் மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்று விண்ணப்பங்களை அளித்தனா்.

இதில் 4 நாள்கள் முகாமில் மண்டலம் 1-இல் 556 விண்ணப்பங்கள், மண்டலம் 2-இல் 528 விண்ணப்பங்கள், மண்டலம் 3-இல் 427 விண்ணப்பங்கள், மண்டலம் 4-இல் 417 விண்ணப்பங்கள் என மொத்தம் 1,928 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 503 விண்ணப்பங்கள் சரிப்பாா்க்கப்பட்டு உரிய ஆவணங்களுடன் வழங்கப்பட்டதால் அவற்றுக்கு உரிய அனுமதி உடனடியாக வழங்கப்பட்டது.

இதர 1,425 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சொத்து வரி விதிப்பு, காலி மனை வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு மாநகராட்சி அலுவலங்களுக்கு சென்று அலைவதை விட, சிறப்பு முகாம்களில் உடனுக்குடன் அனுமதி வழங்கப்படுவதால், மாதந்தோறும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை நடத்த மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com