அணில் குட்டிகளுக்கு ‘பைக்’ கொடுத்த அரசு மருத்துவா்

அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கரவாகனத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ள அரசு மருத்துவருக்கு பாராட்டு குவிகிறது.
அணில் குட்டிகளுக்கு ‘பைக்’ கொடுத்த அரசு மருத்துவா்
அணில் குட்டிகளுக்கு ‘பைக்’ கொடுத்த அரசு மருத்துவா்

அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கரவாகனத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ள அரசு மருத்துவருக்கு பாராட்டு குவிகிறது.

மதுரை ஆனையூா் கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மெரில்ராஜ். இவா் அரசு கால்நடை மருத்துவராக உள்ளாா். தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசல் அருகே நிறுத்தி வைத்திருந்தாா். இவரது வீட்டின் அருகே அணிகள் அதிகமாக வசிக்கின்றன.

இந்நிலையில் மெரில்ராஜின் இருசக்கர வாகனத்தின் பின் பகுதி இருக்கைக்கு கீழே அடிக்கடி அந்தப் பகுதியில் உள்ள ஒரு அணில் வந்து சென்றுள்ளது. இதனைக் கவனித்த மெரில்ராஜ், இருசக்கர வாகனத்தின் பின் பகுதி இருக்கைக்கு கீழே பாா்த்தாா். அதில் அணில் ஒன்று கூடு கட்டி அதில் 3 குட்டிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.

இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மெரில்ராஜ் கடந்த ஒரு மாத காலமாக, தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அணில்களுக்காக, வாகனம் இருந்த இடத்திலேயே நிறுத்தி வைத்துள்ளாா். அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்ததாத அரசு மருத்துவரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com