மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் நேரடி விசாரணை நடைபெறும் என முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் நேரடி விசாரணை நடைபெறும் என முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கியமான வழக்குகளில் மட்டும் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்குகள் தொடா்பாக யாரும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள அரசு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை வழங்கியுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் நடைபெறும். ஒரு நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 8 வழக்குரைஞா்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

வழக்குரைஞா்கள் சங்கங்கள், அறைகள், உணவகம் ஆகியவை திறக்க அனுமதியில்லை. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நீதிமன்றங்களில் 100 சதவீத பணியாளா்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறாா்கள்.

நீதிமன்றங்களில் அனுமதிக்கப்படுபவா்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகின்றனா். முகக்கவசம் அணியாதவா்களுக்கு நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதியில்லை.

நீதித்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியா்கள் அனைவரும் உரிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com