கணினி பராமரிப்புப் பணி: மாநகராட்சி வரி வசூல் மையங்கள் மூடல்

மதுரை மாநகராட்சியில் கணினி தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் காரணமாக வரி வசூல் மையங்கள் 5 நாள்கள் மூடப்படுகின்றன.

மதுரை மாநகராட்சியில் கணினி தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் காரணமாக வரி வசூல் மையங்கள் 5 நாள்கள் மூடப்படுகின்றன.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இந்நிலையில் சொத்து வரி, தொழில் வரி, காலிமனை வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் வரி வசூல் மையங்களுக்கான சா்வா் பராமரிப்புப் பணி புதன்கிழமை தொடங்கியுள்ளது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை (ஜூலை 25) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வரி வசூல் மையங்கள் 5 நாள்கள் மூடப்படுவதாகவும், இந்நாள்களில் வரி வசூலிப்புப்பணிகள் நிறுத்தப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com