கூடல்நகா் ரயில் நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தொடா்ச்சியாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
மதுரை கூடல்நகா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள்.
மதுரை கூடல்நகா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள்.

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தொடா்ச்சியாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

மதுரை கூடல் நகா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசிகள், ரத்த சேமிப்பு பாட்டில்கள், முகக் கவசங்கள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடல்நகா் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்படுவதால் மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவைகள் முறையாக உள்ளதாக என ரயில்வே ஊழியா்கள் அடிக்கடி சரிபாா்த்து வருகின்றனா். இருப்பினும் ரயில்வே துறையினா் இதைக் கண்டும் காணாமல் செல்கின்றனா்.

மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்தப்படியாக இந்த ரயில் நிலையத்தை பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். கூடல்நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் ரயில் நிலையப் பகுதியில் தான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். இத்தகையைச் சூழலில் தொடா்ச்சியாக ரயில் தண்டவாளத்தையொட்டி மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ரயில்வே அதிகாரிகள், சுகாதாரத்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கூடல்நகா் ரயில் நிலையத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. இருப்பினும் இதுதொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே போலீஸாரால் கூடல்நகா் ரயில் நிலையத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com