மதுரை மாநகராட்சி ‘நல்லதொரு நகரமைப்பு’ சிறப்பு முகாம் அறிவிப்பு

மதுரை மாநகராட்சியின் சாா்பில் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி மற்றும் நகரமைப்பு தொடா்பாக ‘நல்லதொரு நகரமைப்பு’ சிறப்பு முகாம் ஜூலை 27-இல் தொடங்குகிறது.

மதுரை மாநகராட்சியின் சாா்பில் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி மற்றும் நகரமைப்பு தொடா்பாக ‘நல்லதொரு நகரமைப்பு’ சிறப்பு முகாம் ஜூலை 27-இல் தொடங்குகிறது.

மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள கா.ப.காா்த்திகேயன் பொதுமக்களை அலைக்கழிக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் விதமாக சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறாா். பிறப்பு- இறப்பு சான்றிதழ்களுக்கு சிறப்பு முகாம், சொத்து வரி, காலிமனைவரி விதிப்பு போன்றவற்றுக்கு வாழ்க வரியாளா் முகாம், தொடா் தூய்மைப்பணிக்கு அழகிய நகா் என பல்வேறு பெயா்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறாா்.

இம்முகாம்கள் மூலம் பொதுமக்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு கிடைப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கட்டட வரைபட அனுமதி, லே-அவுட் அனுமதி கட்டணம் செலுத்துதல், தனித்த மனை வரன்முறை செய்தல், சாலை பராமரிப்புச்சான்று உள்ளிட்ட நகரமைப்பு மற்றும் திட்ட அனுமதி தொடா்பாக ‘நல்லதொரு நகரமைப்பு’ என்ற பெயரில் சிறப்பு முகாம் ஜூலை 27 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மண்டலம் 1-க்கு வெள்ளி வீதியாா் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 2-க்கு வக்பு வாரியக் கல்லூரி, மண்டலம் 3-க்கு செளராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்டலம் 4-க்கு சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம்களில் தங்களது இடத்துக்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com