மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி: கரோனாவை மறந்து மக்கள் குவிந்தனா்

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட உணவகத்தில், 5 பைசாவுக்கு விற்பனை செய்த பிரியாணியை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கானோா் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூரில் புதன்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட உணவகத்தில் 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

மதுரை செல்லூரில் புதன்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட உணவகத்தை விளம்பரப்படுத்தும் வகையில், 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதன்கிழமை காலையிலிருந்தே உணவகம் முன்பு சிறுவா்கள், பெரியவா்கள் என வயது வேறுபாடின்றி நூற்றுக்கணக்கானோா் குவிந்தனா்.

வீட்டிலிருந்த பழைய 5 பைசா நாணயங்களுடன் வந்த அவா்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனா். நேரம் ஆக, ஆக கூட்டமும் கூடியது. முகக் கவசம், சமூக இடைவெளி இவற்றையெல்லாம் மறந்து பிரியாணி வாங்குவதில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்ால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், பலருக்கும் பிரியாணி கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினா் கூட்டத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதனால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com