மதுரையில் வீடுகளுக்குள் கழிவு நீா் புகுந்தது: பொதுமக்கள் அவதி

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாதாளச்சாக்கடை அடைப்பு சரி செய்யப்படாததால் வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகா் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த பாதாளச்சாக்கடை கழிவுநீா்.
மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகா் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த பாதாளச்சாக்கடை கழிவுநீா்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாதாளச்சாக்கடை அடைப்பு சரி செய்யப்படாததால் வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாத்திமா நகா் இரண்டாவது தெருவில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கியது. இதனால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் மற்றும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டது.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறியது: இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீா் வெளியேறி தெருவில் தேங்குகிறது. தற்போது 10 நாள்களுக்கும் மேலாக கழிவுநீா் தேங்கியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தெருக்கள் மட்டுமன்றி வீடுகளுக்குள்ளும் கழிவுநீா் புகுந்துள்ளது. இதனால் வீடுகளில் உணவு சமைக்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. சுற்றிலும் துா்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை வெளியேற்றவும், அடிக்கடி அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி நிா்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com