கோரிப்பாளையம், தல்லாகுளம் மேலமடை பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 26th July 2021 05:33 AM | Last Updated : 26th July 2021 05:33 AM | அ+அ அ- |

மழைக்கால அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோரிப்பாளையம், தல்லாகுளம், மேலமடை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று, மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
கோரிப்பாளையம்: செனாய் நகா், பனகல் சாலை, ஆழ்வாா்புரம், கக்கன் தெரு, புளியந்தோப்பு, ராமையா தெரு, வைத்திநாதய்யா் தெரு, திருவேங்கடபுரம், கோரிப்பாளையம், பட்டறைக்காரத் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சின்ன கண்மாய், எச்.எ. கான் சாலை, இ2இ2 சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தல்லாகுளம்: அழகா்கோவில் சாலையில் (ஐடிஐ முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), அரசு மருத்துவமனை முதன்மையா் இல்லம், காமராஜா் நகா் 1 முதல் 4-ஆவது தெருக்கள், ஹா்சகான் சாலை, கமலா 1, 2-ஆவது தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கோகலே சாலை, கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மேலமடை: கம்மாபட்டி, கோமதிபுரம் 1 முதல் 7 ஆவது தெருக்கள் வரை, மேலமடை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, முகவை தெரு, மருதுபாண்டியா் தெரு, பாண்டிகோவில் பகுதியில் சில இடங்கள்.