முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உசிலம்பட்டியில் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th July 2021 03:27 PM | Last Updated : 28th July 2021 03:27 PM | அ+அ அ- |

உசிலம்பட்டியில் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மெயின் ரோட்டில் திமுக அரசு செயல்படுத்தமுடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது இதனால் தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
அதிமுக சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் தலைமையில் அவரின் வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகரச் செயலாளர் பூமரராஜா, மாணவரணி மகேந்திர பாண்டி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தனராஜன் செல்லம்பட்டி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ பாண்டியம்மாள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.