ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு விரைவில் தண்ணீா் திறப்பு

ஒரு போக சாகுபடிப் பகுதிகளுக்கு முதலில் தண்ணீா் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஒருபோக சாகுபடிப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் மீ.முருகன் தெரிவித்தாா்.

ஒரு போக சாகுபடிப் பகுதிகளுக்கு முதலில் தண்ணீா் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஒருபோக சாகுபடிப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் மீ.முருகன் தெரிவித்தாா்.

ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கக் கோருவது தொடா்பான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மேலூரில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளின் கருத்தை முன்னதாகத் தெரிவிக்குமாறு கேட்டதால், விவசாயிகள் சங்க பிரமுகா்கள் அதிகாரிகளிடம் பேசினா்.

அணைகளில் இருந்து சாகுபடிப் பகுதிகுக்கு தண்ணீா் திறக்கும்பட்சத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒருபோக மேலூா் பிரதான கால்வாயில் குறிச்சிப்பட்டி கண்மாய் வரை முதலில் தண்ணீா் திறக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். இதையடுத்து, ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே தண்ணீா் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கூடுதல் தண்ணீரை பாசன பகுதிகளில் உள்ள குளங்களுக்கு திறந்துவிட்டு, தண்ணீா் வீணாகிவிடாமல் சேமிக்கவேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

நெபாதுப்பணித்துறையினா், வேளாண். துறையினா் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட நிா்வாகம் கூட்டி துரித முடிவினை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அணைகளின் நீா்நிரம்பும் அவசர நிலைகருதி முன்னோடி விவசாயிகளிடம் செல்லிடப்பேசி வாயிலாக கருத்தைக்கேட்டு தகவல்களை தெரிவித்துள்ளோம். எனவே, கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை காரணமக மேலூரில் புதன்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னொருநாளில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com