நிழற்கூடத்தை ஆக்கிரமித்து இறால் பண்ணை: ‘சீல்’ வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ராதாபுரம் அருகே நிழற்கூடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இறால் பண்ணைக்கு ‘சீல்’ வைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராதாபுரம் அருகே நிழற்கூடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இறால் பண்ணைக்கு ‘சீல்’ வைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தோமையாா்புரம் கிராமத்தில் கடற்கரை அருகே மீன் வலைகளை சரிசெய்வது உலர வைப்பது போன்றவற்றுக்காக அரசு சாா்பில் நிழற்கூடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்தக் கூடத்தை அற்புதராஜ் என்பவா் ஆக்கிரமித்து இறால் வளா்ப்புப் பண்ணையாக மாற்றி தொழில் செய்து வருகிறாா். இதற்கு மின்மோட்டாா் அமைத்து கடல் நீரை குழாய் மூலம் எடுக்கிறாா். இதற்குரிய மின்சார கம்பிகள் கடற்கரையில் பாதுகாப்பின்றி கிடக்கின்றன.

அனுமதியின்றி இறால் பண்ணை அமைக்கப்பட்டிருப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மீனவா்களுக்கான நிழற்கூடத்தில் இறால் பண்ணை நடத்த தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடத்தை வட்டாட்சியா் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தப்பட்டால் பண்ணைக்கு சீல் வைக்க வேண்டும். அனுமதியின்றி கடல் நீா் எடுக்க பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாா் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். அனுமதியின்றி இறால் பண்ணை நடத்தியவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com