நுண்ணீா் பாசனத் திட்டம்: ஆக.3,4-இல் சிறப்பு முகாம்

நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு நிலஉடைமை ஆவணங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் ஆகஸ்ட் 3, 4 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு நிலஉடைமை ஆவணங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் ஆகஸ்ட் 3, 4 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் 2100 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தினை தொடா்பு கொள்ளலாம்.

நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் நிலஉடைமை ஆவணங்களைப் பெறுவதற்கு வசதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்களது நிலத்துக்குரிய சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ஆகியவற்றை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரை கிழக்கு, மதுரைமேற்கு, திருப்பரங்குன்றம், மேலூா், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய வட்டாரங்களிலும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி அலங்காநல்லூா், திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி ஆகிய வட்டாரங்களிலும் வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com