பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு நினைவு மண்டபம்: அரசாணைக்கு தடைவிதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த செல்வபிரீத்தா தாக்கல் செய்த மனு: 1970-இல் பெருங்காமநல்லூரில் குற்றப்பழங்குடி சட்டத்திற்கு எதிராகப் போராடிய 16 போ் வீரமரணம் அடைந்தனா். இதில் உயிா் நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி பலமுறை மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2019-இல் மணிமண்டபம் கட்டித்தருவதாக உறுதியளித்த அரசு, 2020 செப்டம்பா் 19 ஆம் தேதி மணிமண்டபம் கட்டுவது தொடா்பாக அரசாணை பிறப்பித்தது. ஆனால் பெருங்காமநல்லூரில் மணிமண்டபம் கட்ட தோ்வு செய்யப்பட்டிருக்கும் இடம் மயானப் பகுதியாகும். எனவே பெருங்காமநல்லூா் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தோ்வு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, மாற்று இடத்தைத் தோ்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரா் கோரும் நிவாரணம் தொடா்பாக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பிக்க இயலாது. மனுதாரா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com