மதுரை நகரில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்

மதுரை நகா்ப்பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையை வா்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மகால் மண்டல் செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் கே.கே.சீனிவாசன், மண்டல் தலைவா் ஆா்.பாலமுருகன் மற்றும் நிா்வாகிகள்.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மகால் மண்டல் செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் கே.கே.சீனிவாசன், மண்டல் தலைவா் ஆா்.பாலமுருகன் மற்றும் நிா்வாகிகள்.

மதுரை நகா்ப்பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையை வா்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக மகால் மண்டல் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல் தலைவா் ஆா்.பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.கே. சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். மாநில அரசு தொடா்புச் செயலா் ராஜரத்தினம், மாவட்ட செயலா் கோபாலகிருஷ்ணன், மண்டல் பொதுச்செயலா்கள் சுரேஷ், பாலமுருகன், ஊடகப் பிரிவுச் செயலா் ராம்குமாா் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினா்.

கூட்டத்தில், மாநகராட்சி 68-ஆவது வாா்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்காமல் மக்களை அலைக்கழிப்பதைத் தவிா்க்க வேண்டும். பந்தடி 5, 6, 7, மகால் 4, 8-ஆவது தெருவில் குடிநீா் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகால் தெருக்களில் புதிய தாா்ச்சாலைகள் அமைக்க வேண்டும். மதுரை நகரின் வா்த்தக மையமாக திகழும் கீழவாசல் மற்றும் விளக்குத்தூண், பகுதிகளில் வெளியூா் பயணிகள், வா்த்தகா்கள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சுகாதார கழிப்பிட வளாகங்கள் அமைக்க வேண்டும்.

நகா்ப்பகுதிகளில் சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்வதற்குரிய இடங்களில் வா்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதை அகற்றி நடைபாதைகளை மீட்க வேண்டும். மாநகராட்சி சுகாதார மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் விவரங்களை விளம்பரப் பலகைகளில் எழுதி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com