குப்பணம்பட்டியில் கரோனா: சுகாதாரத்துறை அலட்சியம்

உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போதும் சுகாதாரத்துறை சாா்பில் எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போதும் சுகாதாரத்துறை சாா்பில் எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பணம்பட்டி கிராமத்தில் இருவருக்கு கரோனா உறுதியானதை அடுத்து அவா்களை கருமாத்தூரில் உள்ள கரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும் கிராமத்தில் சுகாதார நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை என குப்பணம்பட்டி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

கிராம மக்களுக்கு காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும், கபசுரக் குடிநீா் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். பொதுவாக ஒரு ஊரில் ஒருவருக்கு கரோனா பாதித்தால் அந்த ஊா் முழுவதும் சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும்.

ஆனால் குப்பணம்பட்டி கிராமத்தில் செல்லம்பட்டி ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனா். உடனடியாக உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com