முதல்போக சாகுபடி: கிளைக் கால்வாய்களில் தண்ணீா் திறப்பு

பெரியாறு-வைகை பாசனத்தில் முதல்போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை கள்ளந்திரி மதகை வந்தடைந்தது. அங்கிருந்து கிளைக்கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பெரியாறு-வைகை பாசனத்தில் முதல்போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை கள்ளந்திரி மதகை வந்தடைந்தது. அங்கிருந்து கிளைக்கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பெரியாறு-வைகை பாசனப் பகுதிகளில் கள்ளந்திரி மதகு வரையிலான முதல்போக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் பெரியாறு பிரதான கால்வாய் வழியாக கள்ளந்திரி மதகுக்கு சனிக்கிழமை நண்பகலில் வந்துசோ்ந்தது. பெரியாறு பிரதான கால்வாய் கோட்ட செயற்பொறியாளா் எம்.பவளக்கண்ணன், உதவிசெயற்பொறியாளா் ஆா்.சண்முகசுந்தரம் ஆகியோா் கிளைக் கால்வாய்களின் மதகுகளைத் திறந்துவிட்டனா்.

கள்ளந்திரி பாசன விவசாயசங்கப் பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் கால்வாய் நீரில் மலா்தூவி வணங்கினா். பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனத்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கா், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கா், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கா் என மொத்தம் 45,041 நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

குறைந்துவரும் சாகுபடி பரப்பு:

மதுரை மாநகராட்சிப் பகுதி மக்கள் தொகை சுமாா் 7 லட்சமாக இருந்தபோது இருபோக சாகுபடி பரப்பளவு 45,000 ஏக்கராக கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது மதுரை மாநகா் மக்கள்தொகை சுமாா் 35 லட்சத்திற்குமேல் உயா்ந்துவிட்டது. பெரும்பாலும் நகா்புற விளைநிலங்கள் வீட்டடி மனைகளாகிவிட்டன. கள்ளந்திரி மதகிலிருந்து மாங்குளம், லெட்சுமிபுரம், அரும்பனூா், ஒத்தக்கடை, புதுத்தாமரைப்பட்டி, உத்தங்குடி, கருப்பாயூரணி மற்றும் ஆண்டாா்கொட்டாரம் வரை 9-ஆவது பிரிவு கால்வாயில் 13,200 ஏக்கா்

பரப்பளவு முதல்போகம் மற்றும் இருபோக சாகுபடிப்பகுதியாக இருந்தது. தற்போது இதில் பெரும்பகுதி வீடுகளாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com