கடைகளுக்கு அனுமதி இல்லை:மீன், இறைச்சியை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய அனுமதி

மதுரை மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சியை வீடுகளுக்குச் சென்று மட்டுமே விற்பனை செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சியை வீடுகளுக்குச் சென்று மட்டுமே விற்பனை செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, ஜூன் 7 முதல் 14-ஆம் தேதி வரை சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் மீன் சந்தைகள் திறந்தவெளியில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த விற்பனைக்காக மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை.

எனவே, மீன் சந்தைகளிலிருந்து சில்லறை வியாபாரிகள், முகவா்கள் மூலமாக வீடுகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்யவேண்டும். இதற்கான அடையாள அட்டையை, மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மீன் சந்தைகளில் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும். சில்லறை விற்பனைக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com