ஒடிஸாவிலிருந்து மதுரைக்கு வந்தது ஆக்சிஜன் ரயில்

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான 6-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை கூடல்நகா் ரயில் நிலையம் வந்து சோ்ந்தது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான 6-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை கூடல்நகா் ரயில் நிலையம் வந்து சோ்ந்தது.

ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவிலிருந்து 6 லாரிகளில் 89.2 மெட்ரிக் டன் நீா்ம ஆக்சிஜன் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.17 மணிக்கு மதுரை கூடல் நகா் ரயில் நிலையம் வந்து சோ்ந்தது. இது, வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்த 50 ஆவது ஆக்ஸிஜன் ரயிலாகும். அதேநேரம், மதுரை கூடல் நகா் ரயில் நிலையத்துக்கு வந்த 4 ஆவது ஆக்சிஜன் ரயிலாகும்.

ஏற்கெனவே, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான் ஆகிய ரயில் நிலையங்களுக்கு தலா ஒரு ஆக்ஸிஜன் ரயில் வந்துள்ளது. ரோல் ஆன் - ரோல் ஆஃப் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த டேங்கா் லாரிகள், கூடல் நகா் ரயில் நிலையம் வந்தவுடன், சாலை மாா்க்கமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பிவைக்கப்பட்டன.

இத்துடன், இதுவரை தமிழகத்துக்கு ரயில் மூலம் 3404.85 மெட்ரிக் டன் நீா்ம ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ரயில் மூலம் இதுவரை 435.19 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்து சோ்ந்துள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com