மதுரையில் சிறப்பு நிவாரணப் பொருள்கள் விநியோகம் எப்போது?

14 வகையான சிறப்பு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பை முழுமையாகக் கிடைக்கப் பெற்றதும், விநியோகம் செய்யப்படும் தேதி மாவட்ட நிா்வாகத்தால் விரைவில் அறிவிக்கப்படும்

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 வகையான சிறப்பு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பை முழுமையாகக் கிடைக்கப் பெற்றதும், விநியோகம் செய்யப்படும் தேதி மாவட்ட நிா்வாகத்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்று வழங்கல் துறையினா் தெரிவித்தனா்.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா பொதுமுடக்க நிவாரண உதவித் தொகையாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் மே மாதம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை ஜூன் 3 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைத்தாா். இந்த சிறப்பு நிவாரணப் பொருள்களுடன், கரோனா நிவாரண உதவித் தொகையின் இரண்டாம் தவணை ரூ. 2 ஆயிரமும் சோ்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் சிறப்பு நிவாரணப் பொருள்கள் எப்போது வழங்கப்படும் என்பது தெரியாத நிலையில் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். பொதுமுடக்கத்தால் வேலையிழந்துள்ளோா் உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருள்களை எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.

மதுரை மாவட்டத்தில் நிவாரணப் பொருள்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேஸ்வரி கூறியது: அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 வகையான சிறப்பு நிவாரணப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் பகுதி பகுதியாக வரப்பெற்று கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

முழுமையாகக் கிடைக்கப் பெற்றதும், நிவாரணப் பொருள்கள் வழங்கும் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும். தற்போது அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நடப்பு மாதத்துக்குரிய உணவுப் பொருள்கள் டோக்கன்கள் வழங்கப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com