உலகச் சுற்றுச்சூழல் தினம்: இணையவழியில் அறிவியல் கண்காட்சி

மதுரையில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் கருத்தரங்கு, அறிவியல் கண்காட்சி உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

மதுரையில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் கருத்தரங்கு, அறிவியல் கண்காட்சி உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

மதுரையில் அகஸ்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ஹனிவெல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில், சுற்றுச்சூழல் தின விழா இணையவழியில் நடத்தப்பட்டது. அறிவியல் ஆசிரியா் தனசேகரன் தலைமை வகித்தாா். இதில், கொண்டபெத்தான் பள்ளி தலைமை ஆசிரியா் தென்னவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் தின வரலாறு அதன் கருப்பொருள், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், மரம் வளா்த்தல், நெகிழியைத் தவிா்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, சுற்றுச்சூழலை காப்போம், நெகிழியைத் தவிா்ப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலை, அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலை, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவியா் பங்கேற்றனா்.

அறிவியல் கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாா்பான இயங்கு மாதிரிகள் ஓவியம், கட்டுரை, கவிதை, சுலோகன் ஆகியவை மாணவ- மாணவியரால் செய்துகாண்பிக்கப்பட்டன. மேலும், எரிமலை செயல்படும் விதம், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தல், காற்றின் மூலம் திசைகாட்டும் கருவி தயாரித்தல், பொ்முடா முக்கோணம் ஆய்வு, மழைநீா் சேகரிப்பு வீடு, நீா் மின்சாரம் தயாரித்தல் ஆகிய இயங்கு மாதிரிகள் செய்து பாா்வைக்கு வைத்த மாணவ, மாணவியா், அவை இயங்கும் விதம் குறித்தும் விவரித்தனா்.

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இணையவழி போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவா்களுக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com