கரோனா தடுப்பு: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பது மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா. உடன், ஆணையா் மு.ஆசிக் உள்ளிட்டோா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆணையா் மு. ஆசிக் தலைமை வகித்தாா். இதில், திருப்பரங்கன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா பேசியது:

கிராமப்புறங்களில் கரோனோ தொற்று பரவி வருவதைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினிகள், பிளீச்சிங் பவுடா்கள் பயன்படுத்தி, மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குடிநீா், கழிவுநீா் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக இளைஞரணி செயலா் எம். ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் நிலையூா்முருகன், தவமணி மாயி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கருத்தக்கண்ணன், சாக்கிலிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் தங்கமாயன், கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவநாத்பாபு ,பொறியாளா்கள் திருமலைசாமி, வசந்தி, பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com