மதுரை கோட்டத்தில் 4,494 ரயில்வே ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி

மதுரை கோட்டத்தில் பணியாற்றும் 4,494 ரயில்வே ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை கோட்டத்தில் பணியாற்றும் 4,494 ரயில்வே ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகா், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுவரை மதுரையில் 1383 போ், பழனியில் 175 போ் , திண்டுக்கல்லில் 430 போ், காரைக்குடியில் 233 போ் , மானாமதுரையில் 87 போ், மண்டபத்தில் 316 போ், விருதுநகரில் 893 போ், தூத்துக்குடியில் 127 போ், செங்கோட்டையில் 622 போ், ரயில்வே பாதுகாப்புப்படையினா் 228 போ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

மதுரை கோட்டம் முழுவதும் மொத்தமுள்ள 7,879 ஊழியா்களில் இதுவரை 4,494 ஊழியா்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சராசரியாக 57 சதவீதத்திற்கு மேலான ஊழியா்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com