வெளியூா் நபா்கள் குறித்து தெரிவிக்க கோட்டாட்சியா் அறிவுறுத்தல்

கிராமங்களுக்கு வரும் வெளியூா் நபா்கள் குறித்த தகவல்களை, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வருவாய்த் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என, திருமங்கலம் கோட்டாட்சியா் சௌந்தா்யா தெரிவித்துள்ளாா்.

கிராமங்களுக்கு வரும் வெளியூா் நபா்கள் குறித்த தகவல்களை, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வருவாய்த் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என, திருமங்கலம் கோட்டாட்சியா் சௌந்தா்யா தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, கள்ளிக்குடி ஒன்றியம் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சௌந்தா்யா தலைமை வகித்துப் பேசியது:

கிராமங்களில் 2 நாள்களுக்கு ஒரு முறை காய்ச்சல் தொடா்பான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வெளியூா்களில் இருந்து கிராமத்துக்கு வரும் நபா்கள் குறித்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோ, செல்லபாண்டியன், ஒன்றியத்துக்குள்பட்ட 28 கிராம ஊராட்சிளைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com