சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளா்களுடன் இயங்க அனுமதிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 10th June 2021 06:36 AM | Last Updated : 10th June 2021 06:36 AM | அ+அ அ- |

சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீத தொழிலாளா்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என லகு உத்யோக் பாரதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் மதுரைக் கிளைத் தலைவா் கே.ஆா்.ஞானசம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதில் காய்கனி, மளிகைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பல்வேறு விதமான உற்பத்திப் பொருள்களைத் தயாரித்து வழங்குவது சிறு தொழில் நிறுவனங்கள் தான். இந்நிறுவனங்கள் இயங்கவில்லை எனில் சந்தைக்கு வரும் பொருள்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு உருவாகிவிடும். ஆகவே, சிறு தொழில் நிறுவனங்களை குறைந்தபட்சம் 50 சதவீத தொழிலாளா்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருள்களை வழங்கக்கூடிய கடைகளையும் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
வன்பொருள் கடைகள், சானிடரி பொருள்கள், பேக்கிங் பொருள்கள், உதிரி பாகக் கடைகளைக் காலை 8 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.