நியாய விலைக் கடை முறைகேடுகளைத் தவிா்க்க பணியாளா்கள் இடமாற்றம்: அமைச்சா் அறிவுறுத்தல்

நியாய விலைக் கடைகளில் நிகழும் முறைகேடுகளைத் தவிா்க்க விற்பனையாளா்களை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்ய

நியாய விலைக் கடைகளில் நிகழும் முறைகேடுகளைத் தவிா்க்க விற்பனையாளா்களை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவுறுத்தினாா்.

மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களின் கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 6 மாவட்டங்களின் கூட்டுறவு இணைப் பதிவாளா்கள், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா்கள் பங்கேற்றனா். கூட்டத்தின்போது நியாய விலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், கடை விற்பனையாளா்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நகா்ப்புற கடைகளில் முறைகேடுகள் அதிகம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சா் ஐ.பெரியசாமி, நியாயவிலைக் கடை விற்பனையாளா்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகள் குறித்து அனைத்து இணைப் பதிவாளா்களிடமும் அறிக்கை பெற்று சமா்ப்பிக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை அறிவுறுத்தினாா். மேலும், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரமற்ற அரிசி கடைகளுக்கு வந்திருப்பது தெரியவந்தால், அதை உடனடியாக மாற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com