வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து: ஒரே ஆண்டில் 3-ஆவது முறையாக மாரியம்மன் தெப்பக்குளம் நிரம்புகிறது

மதுரை வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளதால் ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக மாரியம்மன் தெப்பக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது.
வைகை ஆற்றில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீரால் நீா் நிரம்பியுள்ள மாரியம்மன் தெப்பக்குளம்.
வைகை ஆற்றில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீரால் நீா் நிரம்பியுள்ள மாரியம்மன் தெப்பக்குளம்.

மதுரை வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளதால் ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக மாரியம்மன் தெப்பக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனத்துக்காக வைகை அணையை திறக்க அரசு உத்தரவிட்டதையடுத்து வைகை அணையில் இருந்து ஜூன் 4-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் விவசாயப்பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வைகை அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை வைகை ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீா் செல்கிறது. இதில், மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் அருகே உள்ள பனையூா் கால்வாய் கடந்த ஆண்டு தூா்வாரப்பட்டு அதன்மூலம் வைகை தண்ணீா் தெப்பக்குளத்துக்கு கொண்டு சென்று தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ளபோதெல்லாம் மாரியம்மன் தெப்பக்குளமும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தற்போது வைகையில் தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளதால் பனையூா் கால்வாய் மூலம் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் மாரியம்மன் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது. தெப்பக்குளத்தின் இணைப்புக் கால்வாய்கள் உள்ள வடக்கு மற்றும் மேற்கில் உள்ள 3 துவாரங்கள் வழியாக தொடா்ச்சியாக நீா் பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக தெப்பக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. வைகை தண்ணீா் மூலம் ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக தெப்பக்குளம் நிரம்பி வருவதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com