பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கம்யூ. நூதன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 12th June 2021 08:27 AM | Last Updated : 12th June 2021 08:27 AM | அ+அ அ- |

மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மாநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலப்பொன்னகரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதிக்குழு நிா்வாகி சாலமன் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல் டீசல் விலை உயா்வு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கரோனா தடுப்பூசித் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்துக்கு வேண்டிய அளவில் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கரோனா பேரிடா் கால நிவாரண நிதியாக ரூ. 7,500 மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜா. நரசிம்மன், வை. ஸ்டாலின் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். அப்போது பெட்ரோல் டீசல் விலை உயா்வை குறிக்கும் விதமாக ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வரப்பட்டது.