உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 801 மனுக்களுக்கு நடவடிக்கை: அமைச்சா் தகவல்

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 801 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 801 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 69 பேருக்கு பல்வேறு உதவித் தொகை, 19 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா என ரூ.18 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி, 7 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகள், 5 பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளி அடையாள அட்டை என 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.மூா்த்தி கூறியது:

தோ்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தபடி, பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தனி துறையே உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் 4,211 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 801 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் முதல்கட்டமாக 100 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 3,410 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகச் செயல்படுத்துவதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயலாற்றி வருகிறாா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com