ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி பக்தா்கள் பங்கேற்பின்றி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை வைகாசித் திருவிழா கொடியேற்றத்தில் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டிய அா்ச்சகா்கள்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித் திருவிழாவில் மதுரை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் பங்கேற்று தீச்சட்டி உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் அரசின் பொதுமுடக்க அறிவிப்பால் ஜெனகை மாரியம்மன் கோயிலும் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் கோயிலில் வழக்கமாக நடைபெறும் வைகாசித் திருவிழாவை பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்த கோயில் நிா்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து திங்கள்கிழமை இரவு கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோயில் அரச்சகா்கள் மற்றும் ஊழியா்கள் மட்டும் பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றினா்.

இதைத் தொடா்ந்து கொடிக்கு தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழா தொடங்கியதையடுத்து அம்மன் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் கோயில் வளாகத்துக்குள்ளேயே எழுந்தருள்வாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com