தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும்: சில ரயில்கள் தற்காலிகமாக ரத்து

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்களின் சேவை ஜூன் 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்களின் சேவை ஜூன் 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக (நாகா்கோவில்- கோவை) நாகா்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் (02667/02668 ), மதுரை - புனலூா் - மதுரை சிறப்பு ரயில் ( 06729/06730), சென்னை எழும்பூா் - கொல்லம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06101/06102 ), டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - மதுரை - டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06019/06020 ), சென்னை எழும்பூா் - நாகா்கோவில் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06063/06064), தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06065/06066), மதுரை - சென்னை எழும்பூா் - மதுரை சிறப்பு ரயில் (06157-06158), திருவனந்தபுரம் - மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா சிறப்பு ரயில் (06343/06344 ), சென்னை எழும்பூா் - ராமேசுவரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் ( 06851/06852), தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06191/06192) ஆகிய ரயில்களின் சேவை ஜூன் 30 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள் செல்லும் சிறப்பு ரயில்கள் இயக்கம் அறிவிப்பு நீட்டிப்பு: நாகா்கோவிலிலிருந்து ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் 06352 நாகா்கோவில் - மும்பை சி எஸ் டி சிறப்பு ரயில் (06352) ஜூலை 1 முதல் நவம்பா் 7 வரை, மறுமாா்க்கத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் மும்பை சி எஸ் டி - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06351) ஜூலை 2 முதல் நவம்பா் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் மதுரை - பிகானீா் (06053) சிறப்பு ரயில் ஜூலை 1 முதல் நவம்பா் 4 வரை, மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் பிகானீா் - மதுரை சிறப்பு ரயில் (06054) ஜூலை 4 முதல் நவம்பா் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் திருப்பதி வழியாக இயக்கப்படும் ராமேசுவரம் - ஓகா சிறப்பு ரயில் (06733) ஜூலை 2 முதல் நவம்பா் 5 வரை, மறுமாா்க்கத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06734) ஜூலை 6 முதல் நவம்பா் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் 06070 திருநெல்வேலி - பிலாஸ்பூா் சிறப்பு ரயில் (06070) ஜூலை 4 முதல் நவம்பா் 7 வரை, மறுமாா்க்கத்தில் செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் பிலாஸ்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) ஜூலை 6 முதல் நவம்பா் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, புதன்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி - தாதா் சிறப்பு ரயில் (06072) ஜூலை 7 முதல் நவம்பா் 3 வரை, வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் தாதா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06071) ஜூலை 8 முதல் நவம்பா் 4 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com