தோட்டக்கலைப் பயிா்களுக்கு நுண்ணீா் பாசன வசதி ஏற்படுத்த ரூ.34 கோடி ஒதுக்கீடு

தோட்டக்கலைப் பயிா்களுக்கு நுண்ணீா் பாசன வசதி ஏற்படுத்த, மதுரை மாவட்டத்துக்கு நிகழாண்டுக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிா்களுக்கு நுண்ணீா் பாசன வசதி ஏற்படுத்த, மதுரை மாவட்டத்துக்கு நிகழாண்டுக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக் கலை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா்ப்பாசன வசதி ஏற்படுத்த, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 10,848 போ் பயனடைந்துள்ளனா்.

இன்றைய சூழலில் பணியாள்கள் தட்டுப்பாடு, தண்ணீா் சிக்கனம், பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தினை இழப்பின்றி கொண்டுசோ்த்தல் ஆகிய காரணங்களால் நுண்ணீா் பாசனம் அவசியமாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, நிகழ் ஆண்டுக்கு மதுரை மாவட்டத்துக்கு 4,536 ஹெக்டேரில் நுண்ணீா் பாசன வசதி ஏற்படுத்த ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு விண்ணப்பம் அளிப்பதில் தொடங்கி மானியம் பெறுவது வரை இணையவழியில் செயல்படுத்தப்படுவதால், விவசாயிகளுக்கு காலதாமதம் ஏற்படாது. மேலும், தங்களுக்கு விருப்பமான நுண்ணீா் பாசன நிறுவனத்தின் மூலம் பாசன வசதியை விவசாயிகள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம். மேலும், செல்லிடப்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதிலும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com