மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: அரசுப் பள்ளிகளில் சோ்க்க பெற்றோா்கள் ஆா்வம்

மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
மதுரை மாநகராட்சி பொன்முடியால் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கைக்கா காத்திருக்கும் மாணவியா்.
மதுரை மாநகராட்சி பொன்முடியால் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கைக்கா காத்திருக்கும் மாணவியா்.

மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் சோ்க்க பெற்றோா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலையொட்டி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை தொடங்கலாம் என அரசு அறிவித்தது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் என 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்க்கை பெற பெற்றோா்கள் ஆா்வம் காட்டினா். இதனால், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் வழக்கமான சோ்க்கையை காட்டிலும், இந்த ஆண்டு அதிகளவில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது.

இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விவரம் இதுவரை வரவில்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை விவரம் ஓரிரு நாள்களில் கிடைத்துவிடும். மாணவா் சோ்க்கைக்கு காலக்கெடு எதுவும் அரசு நிா்ணயிக்கவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com