மேலூா், அழகா்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 15th June 2021 06:15 AM | Last Updated : 15th June 2021 06:15 AM | அ+அ அ- |

மேலூா், ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, கொட்டாம்பட்டி மற்றும் அழகா்கோவில் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜூன் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மேலூா் நகா், கொட்டகுடி, பனங்காடி, திருவாதவூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஒத்தக்கடை, வேளாண்மைக் கல்லூரி, நெல்லியேந்தல்பட்டி, கருப்பாயூரணி, ஒத்தப்பட்டி, அம்மாபட்டி, காளிகாப்பான், வீரபாண்டி, கங்கைபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி, தெற்குத்தெரு, வெள்ளரிப்பட்டி, வலச்சிகுளம், அ.வல்லாளபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.
அழகா்கோவில், சத்திரப்பட்டி, கடவூா், காஞ்சரம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள். கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பாண்டங்குடி, சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் (பொறுப்பு) வீ. மாதவன் தெரிவித்துள்ளாா்.