ரேஷன் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சா் பி.மூா்த்தி

நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த கருப்பாயூரணி அப்பா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கரோனா நிவாரண உதவித் தொகை 2-ஆம் தவணை மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரணப் பொருள்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு அவா், செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மூா்த்தி கூறியது: மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 72 ஆயிரத்து 14 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. அவைகளை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் அடிப்படையில் தினமும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போா்க்கால நடவடிக்கைகள் காரணமாக, கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,500-க்கு மேல் இருந்த நிலையில், தற்போது, 219 ஆகக் குறைந்திருக்கிறது.

தனியாா் நிதி நிறுவனங்கள் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த மகளிா் குழுவினரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரால் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் அத்துமீறி நடந்து கொள்வோா் மீதும், கந்துவட்டி போன்ற புகாா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுகிறது.

நியாயவிலைக் கடைகளில் இருந்து அரிசி கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தவிா்க்க, நீண்டகாலமாக ஒரே கடையில் பணியாற்றும் விற்பனையாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். முறைகேடுகள் மற்றும் தரமற்ற பொருள்கள் விநியோகம் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

மதுரை மாவட்டத்துக்கு 30 ஆயிரம் தடுப்பூசிகள் 4 நாள்களுக்கு முன்பு பெறப்பட்டு, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், அதிகம்போ் பணிபுரியக் கூடிய துறையினருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன. மத்திய அரசு அடுத்தடுத்து கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பும் நிலையில், தடுப்பூசி போடும் பணி இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ராஜேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து நிலையூா், கைத்தறி நகா், பெருங்குடி ஆகிய இடங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தைத் அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

முன்மாதிரித் திட்டம்: இதேபோல் மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவி 2-ஆம் தவணையை வழங்கிய அமைச்சா் பின்னா் கூறியது: முந்தைய ஆட்சியின்போது கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அதிமுக அரசு ரூ.1,000 மட்டுமே வழங்கியது. அதன் பிறகு தோ்தல்களுக்கு சில நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொண்டனா். இதுவரை இல்லாத வகையில் முன்மாதிரித் திட்டமாக தோ்தல் வாக்குறுதியின்படி, இப்போது கரோனா உதவித் தொகை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com