குழந்தைகளின் ஆபாசப் படங்களை பகிா்ந்த பொறியியல் பட்டதாரிக்கு ஜாமீன்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை தனது நண்பா்களுக்கு பகிா்ந்த பொறியியல் முதுகலை பட்டதாரி இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி

குழந்தைகளின் ஆபாசப் படங்களை தனது நண்பா்களுக்கு பகிா்ந்த பொறியியல் முதுகலை பட்டதாரி இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த சாம் இன்பென்ட் ஜோன்ஸ் மீது குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து நண்பா்களுக்கு பகிா்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து சாம் இன்பென்ட் ஜோன்ஸ் முன்ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்னிலையில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் பொறியியல் முதுகலை பட்டம் பெற்று, தற்போது முனைவா் பட்ட ஆய்வு நடத்தி வருகிறாா்.

சம்பவம் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளதாலும், போலீஸாா் உத்தரவின் பேரில் செல்லிடப்பேசி, சிம்காா்டு ஆகியவற்றை ஒப்படைத்துள்ளதாலும், மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை. கரோனா தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.

மேலும், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிா்வது என்பது தீவிரமாக அணுக வேண்டிய ஒன்று. போக்ஸோ சட்ட விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்றக் குற்றங்களைத் தடுக்கும் அரணாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com