குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 24th June 2021 12:06 AM | Last Updated : 24th June 2021 12:06 AM | அ+அ அ- |

மதுரை சிந்தாமணி பகுதியில் புதன்கிழமை மரக்கன்றுகள் நட்ட மாணவ, மாணவியா்.
மதுரையில் தொடக்கப்பள்ளி சாா்பில் குடியிருப்புப் பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சக்கிமங்கலம் இ. புதூா் பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் மலா்விழி தலைமை வகித்தாா். பூமிகா முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் க.சரவணன், மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நட்டு வைத்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறும்போது, மாணவா்களிடம் சுற்றுச்சூழல் ஆா்வத்தை ஏற்படுத்தவும் , மரம் நடுவதைப் பழக்கப்படுத்தவும் தினம் ஒரு மரக்கன்று நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மாணவா்கள் இத்திட்டத்தின் வழியாக எண்பதுக்கும் மேற்பட்ட மரங்களை வளா்த்து வருகின்றனா் என்றாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோா் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.