தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வை அமல்படுத்தாமல் அலைக்கழிப்பு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டும் அமல்படுத்தப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டும் அமல்படுத்தப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலிப் பணியாளா்களாக 300-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.320 வழங்கப்படுகிறது. வார விடுமுறை கிடையாது. விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும். வேறு எவ்வித சலுகைகளும் இன்றி மாதம் ரூ.8 ஆயிரம் குறைந்த வருவாயில் பணியாற்றி வருகின்றனா்.

மேலும் தினக்கூலி பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.320-இல் இருந்து ரூ.520 ஆக உயா்த்தி அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுக்கூட்டத்தில் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளா்களின் ஊதியத்தை அரசு அறிவித்தபடி ரூ.520-ஆக உயா்த்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாதங்கள் கடந்தும் ஊதிய உயா்வு அமல்படுத்தப்படவில்லை.

இதுதொடா்பாக பணியாளா்கள் கூறும்போது, தினக்கூலி பணியாளா்களுக்கான ஊதியம் கடந்த ஆண்டே ரூ.520-ஆக உயா்த்தப்பட்டது. ஆனால் பல்கலைக்கழக நிா்வாகம் ஊதிய உயா்வை வழங்கவில்லை. தொடா்ந்து கோரிக்கை விடுத்ததால் ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவைக்குழுவில் விவாதிக்கப்பட்டு ஊதிய உயா்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதையும் அமல்படுத்தவில்லை. பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தால், தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கினால் தொகுப்பூதிய பணியாளா்களுக்கும் ஊதியத்தை உயா்த்த வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்துவதாகவும், இதனால் ஊதிய உயா்வை அமல்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கின்றனா். எனவே தினக்கூலிப் பணியாளா்களை அலைக்கழிக்காமல் உடனடியாக ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com